Find us on Google+ இணையத் தமிழன்: "பெட்ரோல் விலையேற்றம்" திரைக்கூத்து விமர்சனம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Tuesday, June 5, 2012

"பெட்ரோல் விலையேற்றம்" திரைக்கூத்து விமர்சனம்


ரு வாரங்களுக்கு முன் வெளியாகி ,மக்களிடம் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய கூத்து "பெட்ரோல் விலையேற்றம்". 

  • UPA (உல்டா புல்டா ஆர்ட்ஸ் ) பெருமையுடன் வழங்கும் , 3 ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடு "பெட்ரோல் விலையேற்றம்".
  • கடந்த 5 மாதங்களில் 3 ஆவது முறையாகவும் , கடந்த 8 ஆண்டுகளில் 18 ஆவது முறையாகவும் ரீமேக் ஆகி வெளி வந்துள்ள கூத்து இது.
  • என்னதான் ரீமேக் ஆக இருந்தாலும் , "ரீமேக் தளபதியின்" படங்களைப் போல இல்லாமல் ,வெளியிட்ட அத்தனை இடங்களிலும் சக்கை போடு போட்டு , நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து, வசூலை வாரிக் குவித்திருக்கிறது "பெட்ரோல் விலையேற்றம் ".

தயாரிப்பு : UPA - II  (உல்டா புல்டா ஆர்ட்ஸ் )
இணை தயாரிப்பு : இந்திய /உலக எண்ணெய் நிறுவனங்கள் .
இயக்கம் (பொம்மை ) : MMS  (எ) மண்ணு மோகன சிங்கம் ?
நிஜ இயக்கம் : இடாலியா சோனியா மைனா .

ந்தியாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் Multi Starrer கூத்தான இது , பல பில்லியன் பொருட் செலவில் மெகா பட்ஜெட் திரைக்கூத்தாக வெளிவந்திருக்கிறது .

நடிகர் /நடிகையர் :

மண்ணு மோகன சிங்கம் ,
முமுதா பானர்ஜி
"குழை"ஞர் கருணா
"பய"லலிதா

மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் ..

திரைதுளிகள்: 

  • பெட்ரோல் விலையேற்றம் வெளியாவது தெரிந்த உடனேயே "பெட்ரோலிய துறை" அமைச்சர் வெளிநாட்டிற்கு எஸ்கேப் ஆகிவிட்டார் .
  • வழக்கம் போல மண்ணு மோகன சிங்கம் , இதற்கும் தனது அரசிற்கும் சம்மந்தமே இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தார் .
  • "குழை"ஞர் கருணா , UPA நிறுவனத்திலிருந்து வெளியேறுவேன் என்று வீர வசனம் பேசி மிரட்டுவது போல நடித்து விட்டு , பின்னர் குழைந்து "நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை" என்று பம்மி பதுங்கியது சிறந்த நகைச்சுவை காட்சி .
  • ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அறிவித்த "பய"லலிதா , தனது "புதுக்கோட்டை இடைதேர்தல்" என்னும் திரைக்கூத்தில் பிஸி ஆகிவிட்டதால் போராட்டம் நமநமத்தது.


பாரத் பந்த்: 

UPA வின் பிரதான எதிர் நிறுவனமான "பாரதீய ஜன்னி பார்ட்டி" பெட்ரோல் விலையேற்றத்தை  எதிர்த்து "பாரத் பந்த்" என்னும் திரைக் கூத்தை அவசரமாக வெளியிட்டது . ஆனால் ஒருசில இடங்களைத் தவிர , மற்ற அனைத்து இடங்களிலும் மண்ணை கவ்வியது "பாரத் பந்த்" . 

பாரதீய ஜன்னி பார்ட்டி நிறுவனத்தின் மூத்த தலைவர் திரு.அத்துவானம் அவர்கள் , இது குறித்து மனம் நொந்து தனது வலைப்பூவில் புலம்பியுள்ளார்.

ஆனாலும் இவர்களின் ஒரே மன தைரியத்தை பாராட்டி "கூகுள்" இதனை சிறந்த பொழுதுபோக்கு?! திரைகூத்தாக அறிவித்துள்ளது .






"பெட்ரோல் விலையேற்றம்" வசூல் மழையை வாரிக் குவித்துள்ளதால் , உல்டா புல்டா நிறுவனம் , இதன் தொடர்ச்சியாக விரைவில் "டீசல் விலையேற்றம்" மற்றும் "சமையல் எரிவாயு விலையேற்றம்" ஆகிய கூத்துக்களை வெளியிட்டு மக்களை கதிகலங்க வைக்க தீவிரமாக யோசித்து வருகிறது.

0 Comments
Tweets
Comments

Popular Posts